காட்டு யானை தாக்குதலால் பயிர்கள் உடைமைகளுக்கு பாரிய சேதம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள ஈச்ச நகரில் இன்று சனிக்கிழமை அதிகாலை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதில் பயன் தரும் வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பல மரங்களை யானைகள் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாகவும் இக் காட்டு யானை தொடர்ந்தும் தங்களது ஊருக்குள் இரவு வேளைகளில் வருவதால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதன்போது பதினைந்திற்கும் மேற்பட்ட தென்னை வாழை மரங்களை முற்றாக நாசமாக்கியதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இச் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் இக் காட்டு யானையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்