முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவிடம், சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் (FCID) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதற்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.










