கோறளைப்பற்று : வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா
வாழைச்சேனை நிருபர் -ஷோபனா ஜெகதீஸ்வரன்-
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா கடந்த வெள்ளிக்கிழமை காலை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.
அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலாசார பண்பாட்டு ஊர்வல நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகளுடன் முறாவோடை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தில் கோறளைப்பற்று பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடனும் முறாவோடை கிராமத்தின் சமய, சமூக அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்புடனும் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
மேலதிக புகைப்படங்களை எமது முகநூலில் பார்வையிடலாம்
https://www.facebook.com/Minnal24News