அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்

-யாழ் நிருபர்-

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் நேற்று புதன் கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைந்துள்ள கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த ஜீலி சங் வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்டார். அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றும் வளாகத்தில் நாட்டப்பட்டது. இவ் விஜயத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி எஸ்.சுரேந்திரகுமாரன், தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வி.பத்மதயாளன், வைத்தியர்கள் ஊழியர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1848 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிசனறியை சேர்ந்த சாமுவேல் மிஸ் கிறீன் என்பவரால் இவ்வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்