-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி தூக்கிட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் குடும்பத்தினர் வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யுவதிக்கு 2023 ஆம் ஆண்டு நோர்வே நாட்டு பிரஜையுடன் திருகோணமலையில் திருமணம் ஆகிய நிலையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் வரோதய நகர் பிரதேசத்தைச் சேர்ந்த ரினா ஸ்ரீலா (வயது-32) இவருக்கு 4மாத குழந்தை ஒன்றும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்