-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
சங்கானை நிற்சாமம் பகுதியை சேர்ந்த முகுந்தன் தீபா (வயது – 48) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கனரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணுடன் பயணித்த அவரது இரண்டு பிள்ளைகள் காயம் அடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மானிப்பாய் பொலிசார் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை பொலிஸார் வாகனம் செலுத்திய சாரதியை விட்டு விட்டு வேறொருவரை கைது செய்து வழக்கினை திசை திருப்ப முற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்