திருகோணமலையில் 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலையில் அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

‘அல்குர்ஆனை சுமந்த உள்ளங்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள அல்ஹுதா ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸா மண்டபத்தில் கல்லூரி நிர்வாக சபைத் தலைவர் ஏ.ஜே.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம் 2022 வரை அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களை கௌரவிக்கும் முகமாக இரண்டாவது பட்டமளிப்பு விழா அஷ்ஷேக் அல்ஹாபிழ் ஏ.டபிள்யூ.எம்.ஷாஹீரினால் (மனாரி) ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது திருகோணமலை-தம்பலகாமம், குச்சவெளி, நிலாவெளி, காத்தான்குடி, மூதூர் கெக்கிராவ, கிண்ணியா, வாழைச்சேனை இறக்கக்கண்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 58 மாணவர்களுக்கே இப்பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் ஏ.ஜீ.எம்.அமீன் பலாஹி, அஷ்ஷேக் வை.நிஹார் முப்தி (ஹிழ்ரி) புத்தளம் மன்பவுள் ஸாலிஹாத் மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் ஏ.எம்.றியாஸ் மற்றும் திவுரும்பொல ஜாமிஆ மனாருள் ஹுதா அரபுக் கல்லூரி அதிபர் அஹமது ஹலாலுத்தீன் மிஸ்பாஹி ஆகியோருடன் பல உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.

குளியாப்பிட்டிய சௌத்துல் ஹஸன் ஜ.எல்.எம்.இக்பால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.