Sri Lanka Tamil News Site

கொரியாவிலிருந்து 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்கள்

- Advertisement -

-பதுளை நிருபர்-

எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட் டுள்ள 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

பணியகத்தின் இலங்கைக்கான அமைப் பாளர் போதகர் பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக. 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் கொரியாவில் இருந்து இலங்கை நாட்டிற்கு வரவழைக்கப்பட்டுள்ளது

- Advertisement -

அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டின் விளைவாக முறையான சிகிச்சை இன்றி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இத்தகையதொரு சூழ்நிலையில் கொரிய நாட்டில் இருந்து 43 கோடி பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

மருந்து பொருட்கள் பெருந்தோட்ட மலையக பகுதிகளுக்கும் நாட்டில் மருத்துவ தேவைப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்க எண்ணியுள்ளோம்.

மேலும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் சில மருந்து பொருட்களையும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -