22 வயது பழங்குடியினப் பெண் ஒருவர் அவரது கணவரால் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் இந்தியா-ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண் ரூபிக்கா என்பவருக்கும் அங்கு வசிக்கும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அன்சாரிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், ரூபிகாவை 10-15 நாள்களுக்கு முன்னர் இரண்டாவது அன்சாரி திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ரூபிகா கடந்த சில நாள்களாக காணாமல் போயுள்ளார்.
- Advertisement -
ரூபிகாவின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் ரூபிக்காவின் வீட்டருகே நாய்கள் எலும்புகள் சிலவற்றை வைத்து கடித்துக் கொண்டு திரிந்ததை அப்பகுதியினர் சந்தேகத்துடன் பார்த்துள்ளனர்
அந்த எலும்புகள் மனித எலும்புகள் போல இருந்த நிலையில், உள்ளூர்வாசிகள் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் எலும்புகளை மீட்டெடுத்தனர்
சந்தேகமடைந்த பொலிஸார் அன்சாரியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு பல துண்டுகளாக வெட்டி சிதைக்கப்பட்ட ரூபிகாவின் உடல் பாகங்களை கண்டெடுத்தனர்.
பழங்குடியின பெண் ரூபிகாவை அன்சாரி கொலை செய்ததும், அவரை கொன்று உடலை 18 துண்டுகளாக வெட்டி சிதைத்ததும் விசாரணையில் அம்பலமான நிலையில், பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும், ரூபிகாவின் காணாமல் போயுள்ள உடல் பாகங்களை மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- Advertisement -