கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் இருந்து பூக்கள், நடனக் கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு உயர்தர திருமண விருந்து உபசாரம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகள் இந்திய விழா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 750 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -
மேலும், இந்நிகழ்வுக்காக பூக்கள் நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் மும்பையில் இருந்து நடனக் கலைஞர்களை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மணமகனின் தந்தை அரச உயர் அதிகாரி என்பதுடன், உயர்மட்ட உயரதிகாரிகள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளதுடன் மணமகனின் தந்தை கடந்த அரசாங்கத்தை விரும்புபவராக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -