-மன்னார் நிருபர்-
மன்னார்-கள்ளிக்கட்டைக்காடு பகுதியில், ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அனோஜன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் பலத்த மழை பெய்த வேளை, குறித்த இளைஞன் ஆடுகளை அடைப்பதற்காக வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த ஆட்டுப்பட்டிக்கு சென்றதாக தெரிய வருகின்றது.
நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராத நிலையில், இளைஞன் ஆட்டுப்பட்டிக்கு அருகாமையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகவும், சம்பவ தினத்தன்று வலிப்பு ஏற்பட்டு அங்கு தேங்கியிருந்த நீரினுள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.