Sri Lanka Tamil News Site

உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் திட்டம்

- Advertisement -

உள்ளூர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உள்நாட்டு விமான சேவைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், நிதி ரீதியாக இலாபகரமாக மாற்றும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள அதிகப்படியான கட்டண முறையை மாற்றி, விமான ரிக்கெட்டுகளுக்கு நிலையான விலை வரம்பை அறிமுகப்படுத்துமாறு சுற்றுலா மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் சுற்றுலாதுறை அரச அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இதுவரை தீவிர முயற்சிகள் எடுக்கப்படாத நிலையில்,  இதனால் ஒட்டுமொத்த சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எம்.ஜௌபர் வலியுறுத்தினார்.

- Advertisement -

நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, சிகிரியா, கொக்கல, சீனக்குடா மற்றும் மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்தும் பணியை ஆரம்பிக்குமாறு சம்மேளனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

வீரவில, மட்டக்களப்பு மற்றும்  யாழ்ப்பாணம் விமான நிலைய வளாகங்களில் விமானங்களுக்கான பயிற்சிப் பாடசாலைகளை நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுற்றுலா மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் தங்கள் சேவை அலுவலகங்களை அமைப்பதற்கு அதிகமான விமான நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதும் மேம்படுத்துவதும் அவசரத் தேவையாக உள்ளது என்றார்.

- Advertisement -