இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 341.09 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை 341.30 ரூபாயாக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.