போசாக்கு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் போசாக்கு உணவு கண்காட்சியும் விழிப்பூட்டல் நிகழ்வும் நேற்று செவ்வாய்கிழமை வவுணதீவு அலுவலகத்தில் நடைபெற்றது
வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் போசனை வைத்திய நிபுணர் வைத்தியர் புளோரியா ரதி ஜெயரூபன், மட்டக்களப்பு பிராந்திய தொற்றா நோய் பொறுப்பு வைத்தியர் எம்.ருதேசன் போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்
ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளல் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை தவிர்த்தல் போன்ற விடயங்கள் பற்றி இக் கண்காட்சியை பார்வையிட வந்தோருக்கு காணெளி மூலமாகவும் உரையாடல் மூலமாகவும் விளக்கமளிக்கப்பட்டது
போசாக்கு மாதத்தை முன்னிட்டு பிரதான நிகழ்வாக குடும்ப நல உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் ஊடாக மிக பெரிய அளவில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதன் போது பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பொது மக்கள், ஆசிரியர்கள் என பலரும் இங்கு வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டு விழிப்பூட்டல் நிகழ்விலும் கலந்து கொண்டனர்