-மூதூர் நிருபர்-
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் பகுதியில் வீடோடு இணைந்ததாக காணப்படும் தேனீர் கடையொன்றின் மேல் தட்டுப் பகுதியிலிருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவமாது இன்று புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர்-பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சாதீக் றிஸ்வி (வயது 48) என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.