தொழில்நுட்பக் கோளாறினால் இன்று புதன்கிழமை தாமதமாக ஆரம்பித்த கொழும்பு பங்குச்சந்தை வர்த்தகம் முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமானது.
இது தொடர்பில் கொழும்பு பங்குச்சந்தை தெரிவித்துள்ளதாவது, 15 வருடங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த மத்திய வைப்பு முறைமை (CDS) கணக்குகளை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை நடைமுறைப்படுத்திய போது, அதனுடன் சில செயலில் உள்ள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பிழையை நிவர்த்தி செய்வதற்காகவே இன்றைய தினத்திற்கான சந்தை நடவடிக்கைகள் இவ்வாறு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.