வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 30 நாட்கள் தேவை

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 30 நாட்கள் தேவை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து அச்சுப் பணிகளையும் 30 நாட்களுக்குள் முடிக்க முடியும் என அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு வழங்கப்பட்ட தொகை 40 மில்லியன் ரூபாவாகும்.

எவ்வாறாயினும், அச்சகம் ஏற்கனவே கிட்டத்தட்ட 150 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சுப் பணிகளை நிறைவு செய்துள்ளதாகவும் 30 நாட்களுக்குள் அச்சு பணியை முடிக்க முடியும் என அரச அச்சக அலுவலக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்