பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலமாக அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற “வசீகரா” என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதை தொடர்ந்து ஏராளமான ஹிட்பாடல்களை அவர் பாடியுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்களைப் பாடுவார். அந்த வகையில் லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதையடுத்து சுயநினைவை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற’று வருகிறார்..

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்