எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்

எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்

வடகொரியாவில் 800,000 இளைஞர்கள் அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அரசு ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் இராணுவத்தில் சேர்வதற்கு கையெழுத்திட்டனர்.

நாட்டின் இளைஞர்களின் முன்னணிப் படை என்று வர்ணிக்கப்படும் சுமார் 800,000 இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் தாயகத்தைப் பாதுகாக்கும் போரிலும், எதிரியை அழிக்கும் போரிலும் இணைவார்கள் என வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கும் ரோண்டோங் சின்மம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்