திருவிழாக்காலத்தை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த, 120 மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை, ஹோலிரூட் தோட்ட பகுதியில் திருவிழாக்காலத்தில் மதுபானசாலைகள் மூடப்பட்டிருப்பதை சாதகமாகப் பயன்படுத்தி, மூடியிருந்த தோட்ட வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே இவை கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட மதுபானங்களின் பெறுமதி சுமார் 450,000 ரூபா (நான்கரை இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான போத்தல்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார்.