நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும்,காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
