தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஆறு பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், தாக்குதலின் பின்னர் அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
