உலகளாவிய ரீதியில் 47-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர் பண்பாட்டையும் விழுமியங்களையும் பாதுகாத்து வரும் “அகண்ட தமிழ் உலகம்” அமைப்பின் ஏற்பாட்டில், “உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்” எனும் கருப்பொருளிலான திருக்குறள் மாநாடு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
இறுதி நிகழ்வு நடைபெறும் இடம்: சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கல்லடி, மட்டக்களப்பு.
திகதி: 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: முற்பகல் 9.30 மணி முதல்.
மாநாட்டின் சிறப்பம்சங்கள்
வள்ளுவத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை இளைய தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் பல்வேறு போட்டிகளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
1. பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி.2.பல்கலைக்கழக மற்றும் உயர்தர மாணவர்கள், இளைஞர்களுக்கான குறும்படப் போட்டி.
3. அறநெறி ஆசிரியர்களுக்கான அறிவு மதிப்பீடு.
4. பேராசிரியர்கள் மற்றும் புலமையாளர்களுக்கான திருக்குறள் தொடர்பான நூல் மதிப்பீடு.
5. அறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கு.
நிர்வாகக் குழு
இம்மாநாட்டினை பேராசிரியர் வ. கனகசிங்கம் (தலைவர்), கலாநிதி மு. தயாநிதி (செயலாளர்) மற்றும் பேராசிரியர் ந. இராஜேஸ்வரன் (திட்ட ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் முன்னின்று நடத்துகின்றனர்.
தொடர்புகளுக்கு
மேலதிக விபரங்களுக்கு அகண்ட தமிழ் உலகம், இல 33, சரவணா வீதி, கல்லடி, மட்டக்களப்பு என்ற முகவரியிலோ அல்லது +94 70 6080 207 என்ற தொலைபேசி இலக்கத்திலோ தொடர்புகொள்ள முடியும். இணையதளம்: www.akthuthiru.lk.
தமிழர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
