மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் (SVIAS) இடம்பெற்ற கட்டிட அனர்த்தத்தின் போது, நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இறுதி வருட மாணவிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
நிறுவகத்தின் மாடிக் கட்டிடமொன்றில், இறுதியாண்டு மாணவிகள் வழமை போல் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மேல்தளத்தின் (Roof/Slab) ஒரு பகுதி திடீரென இடிந்து அவர்கள் மீது வீழ்ந்துள்ளது.
இதில் காயமடைந்த மாணவிகள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகமும் உரிய அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.