மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகம், பிரதேச கலாசார பேரவை மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்தும் “மண்முனைப்பற்று பிரதேச கவிதைகளோடு பேசுவோம்” நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கலாசார பேரவை உப தலைவரும், உதவிப்பிரதேச செயலாளருமான கி.இளம்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு, பிரதம அதிதியாக பிரதேச கலாசார அதிகாரசபையின் நிறைவேற்று தலைவரும், பிரதேச செயலாளருமான தெட்சணகௌரி தினேஷ் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக ஓய்வு நிலை கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், கவிஞர் த.கோபாலகிருஸ்ணன் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

மறைந்த கலைஞர்களுக்கான மலரஞ்சலி இடம்பெற்று, மண்முனைப்பற்று கலைஞர்களின் புத்தகக்கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பல்வேறு கண்கவர் நிகழ்வுகளும் நிகழ்வை அலங்கரித்தன.
