சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி டோ லாம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 11.55 வியட்னாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டோ லாம் பாராளுமன்ற உரை.
பி.ப. 12.40 நாடாளுமன்ற நடவடிக்கை முறையை ஒத்திவைத்தல்.
பி.ப. 1.30 நாடாளுமன்றம் மீண்டும் கூடுதல்.
பி.ப. 1.30 – பி.ப. 5.30 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன,
(i) தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல் (ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி).
(ii) வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல் (சமிந்த விஜேசிறி).
(iii) புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் ஸ்தாபித்தல் (ரவி கருணாநாயக்க).
(iv) அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (லால் பிரேமநாத்).
(v) பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் (ரோஹண பண்டார).
(vi) பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் (நலின் பண்டார ஜயமஹ).
(vii) பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல் (ரவீந்திர பண்டார