சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து, நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்தார்.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் பேரில், நிட்டம்புவ பொலிஸார் அவரை நேற்று இரவு 11.45 மணிக்கு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைது செய்தனர்
இவர் இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அச்சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும், பணத்துக்காகச் சிறுமியை விற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.