சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை தொகை இந்த காலாண்டு மற்றும் அடுத்த காலாண்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணத்தை வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதையடுத்து, இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு சுமார் 5 சதவீதமான மின் நுகர்வோருக்கு மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 95 சதவீதமான நுகர்வோருக்கு இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு பொருந்தாது என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.