இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் (ACMC) பிரதிநிதித்துவப்படுத்தி குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான அவர், மாநகர சபையில் ஆட்சியமைக்கும் போது தனது ஆதரவைத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வழங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் பிரதி மேயராகப் பதவியேற்றார்.
குருணாகல் பேருந்து நிலையத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் பொது மலசலக்கூடத்தைச் சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை (Tender) வழங்குவதற்காகவே அவர் குறித்த இலஞ்சப் பணத்தைக் கோரியதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று வெள்ளிக்கிழமை பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீன் கைது செய்யப்பட்டார்.