சர்வதேச சந்தையில் இன்று சனிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நான்காயிரத்து 715 டொலர்களாக பதிவாகியுள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80.39 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையில் இன்றையதினம் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைய வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,538 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.