யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 12ஆம் நாள் அகழ்வுப்பணி இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்றைய அகழ்வின் போது, என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று வெளிப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே வெளிப்பட்டிருந்த என்புக்கூடுகளில் இரண்டு என்புகூடுகள் நேற்று வெள்ளிக்கிழமை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.
அதற்கமைய, இதுவரையில் மொத்தமாக 256 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
260 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, மூன்றாம் கட்ட அகழ்வின் இதுவரையான காலப்பகுதியில் 17 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.