இலங்கை மத்திய வங்கியினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 336.60 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.70 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று அது 90 சதத்தால் அதிகரித்துள்ளது.