இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை இதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நிலவிய அதே விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.