-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த நீதிபதியின் இடமாற்றத்துக்கும் வடக்குமாகாண ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பிலேயே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றதாக, ஆளுநர் செயலகத்தால் தெரிவிக்கப்படுகிறது.