Sri Lanka Tamil News Site

திடீர் சுற்றிவளைப்பில் மூவர் கைது

- Advertisement -

-யாழ் நிருபர்-

கோப்பாய் பொலிஸாரினால்  திடீர் சுற்றி வளைப்பு இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதை பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் , வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இன்று கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

சுற்றி வளைப்பின் போது ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 24 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!