மீகஹதென்ன பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியேறிய பின்னர் காணாமல் போன நபர் ஒருவரைக் கண்டறிவதற்கு இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மீகஹதென்ன, புவக்கஹஹேன பகுதியைச் சேர்ந்த விக்ரமநாயக்க கருணாரத்னகே தர்ஷன திவங்க (வயது 43) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரின் தந்தை வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மீகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மன்னம்பிட்டி மற்றும் வெலிகந்த பகுதிகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நபர் சுமார் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் என்பதுடன், மாநிறமான தோற்றம், மெலிந்த உடல்வாகு மற்றும் குறுகிய தலைமுடியைக் கொண்டவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- மீகஹதென்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591706
- மீகஹதென்ன பொலிஸ் நிலையம்: 034-2284022
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹதென்ன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










