Sri Lanka Tamil News Site

தகப்பனை அடித்து கொலை செய்த வாய்பேச முடியாத மகன்

- Advertisement -

-பதுளை நிருபர்-

மகன் ஒருவர் தகப்பனை மரக்கட்டையால் தலையில் தாக்கியதில் தகப்பன் சம்பவ இடத்திலேயே பலியாகிய சம்பவம் பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்தை தோட்டம் வெவெஸ்த்தை பெருந்தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

குறித்த பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய வாய்பேசமுடியாத மகன் தனது 60 வயதுடைய தகப்பனை மரக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.

- Advertisement -

இதன்போது, தகப்பன் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய வாய்பேசமுடியாத மகனை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான குறித்த இளைஞரின் தாயார் இரண்டு திருமணங்கள் முடித்தவர் என்பதுடன், முதல் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாகவும், தாயாரின் இரண்டாவது கணவரையே மகன் தாக்கி கொலை செய்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர் .

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

- Advertisement -