கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு-களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகிறது.
இதனையிட்டு களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார பிரிவினரால் விசேட உணவுப் பாதுகாப்பு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர், பிரதேச சுகாதாரப் பரிசோதகர் அடங்கிய குழுவினரால் ஆலய வளாகத்தில் பொதுமக்கள் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட உணவுப்பரிசோதனையின் போது, வேறு மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்பாளி பழம், மாம்பழம், யானைக் கொய்யா, வாழைப்பழம் ஆகிய பழுதடைந்த 50 கிலோ பழங்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டு உடன் அழிக்கப்பட்டது.
ஆலய உற்சவ காலங்களில் தொடர்ச்சியாக உணவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.