லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3இ690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 18 ரூபாயினால் குறைக்கப்பட்டு 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்