மூதூரில் மதுபான சாலை திறப்புக்கு எதிர்ப்பு: 13 நபர்கள் கைது

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மதுபானசாலை திறக்கப்பட்டதையடுத்து அதில் அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 13 நபர்களை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 9 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதுடன் 5 ஆண்களை பாதுகாப்பு நிமித்தம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அமைதியின்மை சம்பவத்தில் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்