Sri Lanka Tamil News Site

பொத்துவில் வைத்தியசாலை விவகாரம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

- Advertisement -

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாக குறைபாடுகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொத்துவில் வைத்தியசாலையின்  வைத்தியர்கள் தற்காலிகமாக பணியில் இருந்து விலகியுள்ளனர்.

வைத்திய அத்தியட்சகரின் அறிவுரையுடன் வைத்தியசாலைக்கு வந்த குழுவொன்றின் செயற்பாடுகளினால் வைத்தியசாலையில் மிகவும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -