Sri Lanka Tamil News Site

பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியீட்டு திகதி அறிவிப்பு

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.500 கோடி அதிகமாக வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம், 3வது இடத்தில் பாகுபலி 2,  4வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம்,  5வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28 ஆம் திகதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

- Advertisement -