சுற்றுலா பயணிகளின் செயற்பாட்டால் நுவரெலியா சுற்றாடல் பாதிப்பு

-நானுஓயா நிருபர்-

நுவரெலியா வசந்தகால நிகழ்வுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் போடப்படும் கழிவுப்பொருட்களால் சுற்றாடல் மாசடைகின்றது என சுற்றாடல் அதிகாரி தெரிவிக்கின்றார்.

இவ்வருட ஆரம்பமான நுவரெலியா வசந்தகால யாத்திரை காலத்தில் நுவரெலியாவிலிருந்து- கிரகரி வாவிக்கு செல்லும் வீதியில் உள்ளூர் யாத்திரிகர்களால் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இவ்வருடம் ஏப்ரல் முதலாம் நுவரெலியா பருவகாலம் ஆரம்பித்து ஒரு மாதங்களில் கிரகரி வாவி மற்றும் விக்ரோரியா பூங்கா சினிசிட்டா சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடத்தில் இருந்து யாத்திரைக்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கழிவுகளை சுற்றாடலில் வீசி சென்றுள்ளனர்.

தொடரும் பருவகால நிகழ்வின் போது நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட சுற்றாடல் பிரிவினாரால் நுவாரெலியா நகர வீதிகளில் தேங்கும் மக்காத திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.

வசந்த காலம் தொடங்கியதில் இருந்து, வார இறுதி நாட்களிலும், வார நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வருகை தருவதால், மக்காத தின்மக்கழிவுகள் மற்றும் அகற்றப்படும் குப்பைகளின் அளவு அதிகமாக உள்ளது என்று சுற்றுச்சூழல் அதிகாரி மேலும் கூறினார்.

இக்கழிவுகள் யாவும் நகர சபையின் பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பின்னர் ஹாவாஎலிய பகுதியில் நிறுவப்பட்டுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு நுவரெலியா பருவகாலம் முடிய இன்னும் ஒரு வாரம் உள்ளது. இம்மாதம் 30 திகதி நிறைவு பெறும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்