ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலமானதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.

இந்நிலையில் இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி அலுவலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்