டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு : அந்தரங்க விடயங்களை நீதிமன்றில் விபரித்தார் ஸ்டோர்மி டெனியல்ஸ்

அமெரிக்காவின் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டெனியல்ஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டமை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உண்மையை மறைப்பதற்காக ஸ்டோர்மி டெனியல்ஸிற்கு பணம் வழங்கியமை தொடர்பான வழக்கு விசாரணை தொடர்கின்ற நிலையில், ஆபாசபட நடிகை டொனால்ட் டிரம்புடன் 2006 இல் உறவுகொண்ட தருணங்களை விபரித்துள்ளார்.

ஒரு பிரபலமான கோல்வ் (Golf) போட்டியில் இருவரும் சந்தித்தது தொடக்கம் டிரம்பின் லேக் தஹோ ஹோட்டல் அறைக்கு சென்றது வரை அவர் விபரமாக நீதிமன்றில் விரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளாடைகளுடன் காணப்பட்ட டிரம்ப் எப்படி தனக்காக போஸ்கொடுத்தார் என்பதையும் ஆபாசபட நடிகை நீதிமன்றில் விபரித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்