ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி தேர்தல் செயல்பாட்டின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து கூட்டத்தின் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆதரவு அளிப்பது, வேட்பாளர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளைப் பாதுகாப்பது, தேர்தலுக்குப் பின்னரான சட்டம் ஒழுங்கைப் பேணுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த இடையூறும் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்