நாவற்குடா பகுதியைசேர்ந்த 48வயதுடைய கந்தப்பொடி தங்கவடிவேல் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை தனது மகளை மேலதிக வகுப்பிற்காக கொண்டு சென்று விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்ப சென்ற வேளையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரியான அம்ஹர் சின்னலெப்பை ஆகியோரும் உயிரிழந்தவரை பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மட்டக்களப்பில் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் காத்திருந்தவர் உயிரிழப்பு
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்