மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் கீழே மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ளார்.
அரசடி பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நாவற்குடா பகுதியை சேர்ந்தவர் எனவும் மாரடைப்பு காரணமாக இவர் உயிர் இழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை உயிர் இழந்த நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்