நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்த விபத்துக்குள்ளானமையினால் சில மணிநேரம் போக்குவரத்து முழுமையாக தடை ஏற்பட்டிருந்தது எனினும் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.
சரிந்து வீழ்ந்த மண்மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்ததையடுத்து குறித்த வீதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
தொடர்ந்து, மத்திய மாகாணத்தில் பிற்பகல் நேரங்களில் விடாது பெய்யும் அடைமழை காரணமாக ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும் , நோர்வூட் நிர்வாகப் பொறியாளர் அலுவலக அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.