புகையிலை உற்பத்தி பொருட்கள் அற்ற பிரதேசம் மற்றும் போதைப்பொருள் பாவனை அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று திங்கட்கிழமை பலாச்சோலை கிராமத்தில் வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டது.
சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைய சமுதாயத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பல்துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விச் சமூகம் ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ் ஊர்வலத்தில், பலாச்சோலை விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
பலாச்சோலை கிராமத்தின் முக்கிய வீதிகளின் ஊடாகச் சென்ற இந்த ஊர்வலத்தில், போதைப்பொருள் மற்றும் புகையிலை பாவனையின் தீமைகளை விளக்கும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பிராந்தியத்தில் ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருளற்ற சமூகச் சூழலை உருவாக்குவதற்கு இவ்வாறான கூட்டு நடவடிக்கைகள் மிக அவசியமானவை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
